இணைய தள பார்வையாளர்களுக்கு வணக்கம் பழனி சம்மந்தமாக அனைத்து தகவல்களும் இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உள்ளோம் பாருங்கள் பகிருங்கள். தொடர்புக்கு: +91 93444 33373
பழனி என்றாலே நினைவுக்கு வருவது அருள் மிகு தண்டயுதபாணி சுவாமி திருக்கோவிலும் பஞ்சாமிர்தமும் தான் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் சிறப்பு என்னவென்றால் திருக்கோவிலில் உள்ள மூலவர் சிலை நவ பாஷானாத்தால் ஆனது அந்த நவபாஷான சிலையை போகர் சித்தர் செய்து சித்த ஆகம விதிப்படி பிரதிஷ்டை செய்துள்ளார்.
அருள்மிகு தண்டாயுதபாணி ஸ்வாமியின் நவபாஷான சிலைக்கு அபிஷேகம் செய்து வரும் பால் இளநீர் பஞ்சாமிர்தம் சந்தனம் விபூதி பிரசாதங்கள் அனைத்துமே அனைத்து விதமான நோய்களையும் தீர்க்கும் அருமருந்து என பக்தர்கள் நம்புகின்றனர் அதனால்தான் தினமும் ஆயிரகணக்கான பக்தர்களும் தைப்பூசம் பங்குனி உத்திரம் போன்ற திருவிழா காலங்களில் லட்சகணக்கான பக்தர்களும் பழனி வந்து அருள்மிகு தண்டயுதபாணி ஸ்வாமியை தரிசனம்செய்து செல்கின்றனர்.
பழனி கோவில் தரிசன நேர விவரம் | Palani Temple Darshan Timing Details
அருள்மிகு பழனி தண்டயுதபாணி சுவாமி திருக்கோவில் காலை 6-00 மணி முதல் இரவு 8-00 மணிவரை திறந்திருக்கும் சிறப்பு நாட்களில் அதிகாலை 4-30 மணிக்கே திறந்துஇருக்கும் இக் கோவிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம், சூரசம்ஹாரம், வைகாசி விசாகம், சிறப்பாக கொண்டாடப்படுகிறது. காலை 5-40 மணிக்கு விஸ்வரூப தரிசனம் அருள்மிகு தண்டயுதபாணி சுவாமி காலை 6-40 க்கு சன்யாசி அலங்காரத் திலும், காலை 8-00 மணிக்கு வேடன் அலங்காரத் திலும், காலை 9-00 மணிக்கு பாலசுப்பிரமணி யர் அலங்காரத் திலும், நண்பகல் 12-00 மணிக்கு வைதீகாள் அலங்காரத்திலும், மாலை 5-30 மணிக்கு ராஜஅ லங்காரத்திலும், இரவு 8-00 மணிக்கு புஷ்ப அலங்காரத்திலும் அருள்மிகு பழனி தண்டயுதபாணி சுவாமி காட்சியளி க்கின்றார்
பழனி கோவில் முடி காணிக்ககை செலுத்தும் விவரங்கள் மற்றும் இடங்கள் / Palani Temple Information
அருள்மிகு பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு முடிகாணிக்கை செலுத்தவரும் பக்தர்கள் முடிக்காணிக்கை செலுத்த இத்திருக்கோவில் சார்பில் திருஆவினன்குடி திருக்கோவில் அருகிலும், தேவர்சிலை பின்புறமும், தண்டபாணி நிலையத்திலும், தண்டபாணிநிலையம் வெளிப்புறமும், தேவஸ்தான அலுவலகம் அருகிலும், வின்ச் அருகிலும், பாதவிநாயகர் கோவில் அருகிலும், சண்முகநதி யிலும், முடிஇற க்கும் இடங்கள் உள்ளன, இவ்விடங்களில் முடியிறக்கும் தொழிலாளர்கள் 330 நபர்கள் பணிபுரிகின்றர்கள், முடிக்காணிக்கை மூலம் வரும் வருமானம் அருள் மிகு பழனியாண்டவர்க்கு செல்கின்றது, பக்தர்களின் முடியும், முடிகாணிக்கையும், அருள்மிகு பழனியாண்டவர்க்கு செல்ல வேண்டும் என்றால், பழனி திருக்கோவில் மூலம் ஏற்பாடு செய்துள்ள இடங்களில்மட்டுமே முடிக்காணிக்கை செலுத்த வேண்டும்.
Vaazhthukkal sirappaana thagavalgal nandri
ReplyDeleteThank You
Delete