பழனி திருக்கோவில் பயணம் தகவல்: இணைய தள பார்வையாளர்களுக்கு வணக்கம் பழனி அருள் மிகு தண்டாயுதபாணி ஸ்வாமியை தரிசனம் செய்ய 670 படிகள் கொண்ட படி பாதை வழியாகவும். யானை பாதை வழியாகவும் செல்லலாம் இடை இடையே நிழல் மண்டபங்கள் உள்ளன, மேலும் குடிநீர் வசதி கழிப்பறை வசதிகளும் உள்ளன. நடந்து செல்ல முடியாதவர்கள் வின்ச், மற்றும் ரோப் கார் மூலமாக மலைமேல் செல்லலாம்,36 இருக்கைகள் கொண்ட 2வின்ச் 32 இருக்கைகள் கொண்ட 1 வின்ச் ஒன்றும் செயல்படுகிறது, 290 மீட்டர் உயரத்தில் உள்ள மலை கோவிலுக்கு 10 நிமிடத்துக்குள் வின்ச் மூலமாக செல்லலாம். அதே போல் 323 மீட்டர் தூரம் உள்ள மலை கோவிலுக்கு ரோப் கார் மூலமாக 3 நிமிடத்துக்குள் செல்லலாம், ரோப் கார் காலை 7மணிமுதல் பிற்பகல் 1:30 மணிவரையும் பிற்பகல் 2:30 மணிமுதல் இரவு 9:00 மணிவரையும் செயல்படுகிறது சிறப்பு தினங்களில் அதிகாலை 3:20 மணிமுதல் வின்ச் செயல்படுகிறது தமிழகத்தில் ரோப் கார் வசதி முதல் முதலில் அமைக்கப்பட்டது பழனி திருக்கோவில்தான் என்பது குறிப்பிடதக்க ஒன்றாகும். தகவல்கள் இன்னும் தொடரும்........
Welcome to Palaniguide.com All Information in Palani Temple. we are going to update all the information about Palani on this website.
Comments
Post a Comment