பழனி திருக்கோவில் தங்கரதம் தகவல்கள்:
பழனி திருக்கோவிலில் தங்கதேர் இழுத்திட வேண்டிக்கொள்ளும் பக்தர்கள் அதற்க்கு கட்டணமாக ₹2000/-செலுத்தவேண்டும். தைப்பூச திருவிழா வின் போது 4 நாட்களும், பங்குனி உத்திர திருவிழாவின் போது 4நாட்களும், நவராத்திரி விழாவின் போது 10 நாட்களும், சூரசம்ஹாரம் நடைபெறும் 1 நாளும், திருகார்த்திகை தீப திருநாள் 1 நாளும் தங்கரத புறப்பாடு கிடையாது. இதை தவிர பிறநாட்களில் பழனி திருக்கோவில் அலுவலகங்களில் பணம் செலுத்தி பக்தர்கள் தங்கரதம் இழுக்கலாம்.
மலை கோவில் மேல் உள்ள அலுவலகத்திலும் பணம் செலுத்தலாம். தங்கரதம் இழுத்திட பணம் செலுத்தும் நபருடன் இருநபர்கள்உடன் செல்லலாம். திருக்கோவில் சார்பில் தங்கரதம் இழுக்கும் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்குவார்கள். பழனி மலைக்கோவிலில் உள்ள தங்கரதம் ஈரோட்டை சேர்ந்த திரு. VVCR. முருகேசமுதலியார். அவர்கள். என்பவரால் 17/08/1947 அன்று பழனி திருக்கோவிலுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடதக்க செய்தியாகும். மேலும் விபரங்களுக்கு திருக்கோவில் அலுவலகத்தை பக்தர்கள் அணுகலாம்.தகவல்கள் இன்னும் தொடரும்........
மலை கோவில் மேல் உள்ள அலுவலகத்திலும் பணம் செலுத்தலாம். தங்கரதம் இழுத்திட பணம் செலுத்தும் நபருடன் இருநபர்கள்உடன் செல்லலாம். திருக்கோவில் சார்பில் தங்கரதம் இழுக்கும் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்குவார்கள். பழனி மலைக்கோவிலில் உள்ள தங்கரதம் ஈரோட்டை சேர்ந்த திரு. VVCR. முருகேசமுதலியார். அவர்கள். என்பவரால் 17/08/1947 அன்று பழனி திருக்கோவிலுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடதக்க செய்தியாகும். மேலும் விபரங்களுக்கு திருக்கோவில் அலுவலகத்தை பக்தர்கள் அணுகலாம்.
Comments
Post a Comment