Skip to main content

Palani Temple information / மூன்றாம்படை வீட்டுதகவல் /திருஆவினன்குடி தகவல்கள். palaniguide.com

Palani Temple Accommodation Information /பழனி திருக்கோவில் தங்கும்விடுதி மற்றும் அறைகள் விபரம்

Palani Temple Accommodation Information& Details /பழனி திருக்கோவில் தங்கும்விடுதி மற்றும் அறைகள் விபரம்:

 இணையதள பார்வையாளர்களுக்கு வணக்கம்,

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்காக குறைந்த கட்டணத்தில் தங்கும் இடவசதி மற்றும் அறைகளும் உள்ளன. தண்டபாணி நிலையம், பூங்காரோட்டில் உள்ளது, இடும்பன் குடில் பழனி தேவஸ்தான அலுவலகம் எதிரில் உள்ளது, கோசாலை விடுதி வின்ச் ஸ்டேஷன் எதிரில் உள்ளது, வேலவன் விடுதி பழனி பேருந்து நிலையத்தில் இருந்து பழனி ரயில் நிலையம் செல்லும் சாலையில் உள்ளது, இந்த தங்கும் விடுதிகளில் ஒருசில இடங்களில் A/C. அறைகளும் உள்ளன. ஆன்லைனில் அறைகள் முன்பதிவு செய்யும் வசதியும் உள்ளது. பழனி தேவஸ்தான இணையதள முகவரியில் சென்று பக்தர்கள் அறைகள் முன்பதிவு செய்துகொள்ளலாம். தகவல்கள் 

இன்னும் தொடரும்...

Comments

Popular posts from this blog

Palani Temple Rope Car | Winch Train Information பழனி திருக்கோவில் ரோப் கார் வின்ச் தகவல்கள்

பழனி திருக்கோவில் பயணம் தகவல்: இணைய தள பார்வையாளர்களுக்கு வணக்கம் பழனி அருள் மிகு தண்டாயுதபாணி ஸ்வாமியை தரிசனம் செய்ய 670 படிகள் கொண்ட படி பாதை வழியாகவும். யானை பாதை வழியாகவும் செல்லலாம் இடை இடையே நிழல் மண்டபங்கள் உள்ளன, மேலும் குடிநீர் வசதி கழிப்பறை வசதிகளும் உள்ளன. நடந்து செல்ல முடியாதவர்கள் வின்ச், மற்றும் ரோப் கார் மூலமாக மலைமேல் செல்லலாம்,36 இருக்கைகள் கொண்ட 2வின்ச் 32 இருக்கைகள் கொண்ட 1 வின்ச் ஒன்றும் செயல்படுகிறது, 290 மீட்டர் உயரத்தில் உள்ள மலை கோவிலுக்கு 10 நிமிடத்துக்குள் வின்ச் மூலமாக செல்லலாம். அதே போல் 323 மீட்டர் தூரம் உள்ள மலை கோவிலுக்கு ரோப் கார் மூலமாக 3 நிமிடத்துக்குள் செல்லலாம், ரோப் கார் காலை 7மணிமுதல் பிற்பகல் 1:30 மணிவரையும் பிற்பகல் 2:30 மணிமுதல் இரவு 9:00 மணிவரையும்   செயல்படுகிறது சிறப்பு தினங்களில் அதிகாலை 3:20 மணிமுதல் வின்ச் செயல்படுகிறது தமிழகத்தில் ரோப் கார் வசதி முதல் முதலில் அமைக்கப்பட்டது பழனி திருக்கோவில்தான் என்பது குறிப்பிடதக்க ஒன்றாகும்.  தகவல்கள் இன்னும் தொடரும்........

பழனி கோவில் முடி காணிக்ககை விவரங்கள் மற்றும் இடங்கள்

      பழனி கோவில் முடி காணிக்ககை செலுத்தும் விவரங்கள் மற்றும் இடங்கள் / Palani Temple Information அருள்மிகு பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு முடிகாணிக்கை செலுத்தவரும் பக்தர்கள் முடிக்காணிக்கை செலுத்த இத்திருக்கோவில் சார்பில் திருஆவினன்குடி திருக்கோவில் அருகிலும், தேவர்சிலை பின்புறமும், தண்டபாணி நிலையத்திலும், தண்டபாணிநிலையம் வெளிப்புறமும், தேவஸ்தான அலுவலகம் அருகிலும், வின்ச் அருகிலும், பாதவிநாயகர் கோவில் அருகிலும், சண்முகநதி யிலும், முடிஇற க்கும் இடங்கள் உள்ளன, இவ்விடங்களில் முடியிறக்கும் தொழிலாளர்கள் 330 நபர்கள் பணிபுரிகின்றர்கள், முடிக்காணிக்கை மூலம் வரும் வருமானம் அருள் மிகு பழனியாண்டவர்க்கு செல்கின்றது, பக்தர்களின் முடியும், முடிகாணிக்கையும், அருள்மிகு பழனியாண்டவர்க்கு செல்ல வேண்டும் என்றால், பழனி திருக்கோவில் மூலம் ஏற்பாடு செய்துள்ள இடங்களில்மட்டுமே முடிக்காணிக்கை செலுத்த வேண்டும்.