Skip to main content

Posts

Palani Temple information / மூன்றாம்படை வீட்டுதகவல் /திருஆவினன்குடி தகவல்கள். palaniguide.com

Recent posts

Palani Temple Accommodation Information /பழனி திருக்கோவில் தங்கும்விடுதி மற்றும் அறைகள் விபரம்

Palani Temple Accommodation Information& Details /பழனி திருக்கோவில் தங்கும்விடுதி மற்றும் அறைகள் விபரம்:  இணையதள பார்வையாளர்களுக்கு வணக்கம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்காக குறைந்த கட்டணத்தில் தங்கும் இடவசதி மற்றும் அறைகளும் உள்ளன. தண்டபாணி நிலையம், பூங்காரோட்டில் உள்ளது, இடும்பன் குடில் பழனி தேவஸ்தான அலுவலகம் எதிரில் உள்ளது, கோசாலை விடுதி வின்ச் ஸ்டேஷன் எதிரில் உள்ளது, வேலவன் விடுதி பழனி பேருந்து நிலையத்தில் இருந்து பழனி ரயில் நிலையம் செல்லும் சாலையில் உள்ளது, இந்த தங்கும் விடுதிகளில் ஒருசில இடங்களில் A/C. அறைகளும் உள்ளன. ஆன்லைனில் அறைகள் முன்பதிவு செய்யும் வசதியும் உள்ளது. பழனி தேவஸ்தான இணையதள முகவரியில் சென்று பக்தர்கள் அறைகள் முன்பதிவு செய்துகொள்ளலாம். தகவல்கள்  இன்னும் தொடரும்...

Palani Temple Rope Car | Winch Train Information பழனி திருக்கோவில் ரோப் கார் வின்ச் தகவல்கள்

பழனி திருக்கோவில் பயணம் தகவல்: இணைய தள பார்வையாளர்களுக்கு வணக்கம் பழனி அருள் மிகு தண்டாயுதபாணி ஸ்வாமியை தரிசனம் செய்ய 670 படிகள் கொண்ட படி பாதை வழியாகவும். யானை பாதை வழியாகவும் செல்லலாம் இடை இடையே நிழல் மண்டபங்கள் உள்ளன, மேலும் குடிநீர் வசதி கழிப்பறை வசதிகளும் உள்ளன. நடந்து செல்ல முடியாதவர்கள் வின்ச், மற்றும் ரோப் கார் மூலமாக மலைமேல் செல்லலாம்,36 இருக்கைகள் கொண்ட 2வின்ச் 32 இருக்கைகள் கொண்ட 1 வின்ச் ஒன்றும் செயல்படுகிறது, 290 மீட்டர் உயரத்தில் உள்ள மலை கோவிலுக்கு 10 நிமிடத்துக்குள் வின்ச் மூலமாக செல்லலாம். அதே போல் 323 மீட்டர் தூரம் உள்ள மலை கோவிலுக்கு ரோப் கார் மூலமாக 3 நிமிடத்துக்குள் செல்லலாம், ரோப் கார் காலை 7மணிமுதல் பிற்பகல் 1:30 மணிவரையும் பிற்பகல் 2:30 மணிமுதல் இரவு 9:00 மணிவரையும்   செயல்படுகிறது சிறப்பு தினங்களில் அதிகாலை 3:20 மணிமுதல் வின்ச் செயல்படுகிறது தமிழகத்தில் ரோப் கார் வசதி முதல் முதலில் அமைக்கப்பட்டது பழனி திருக்கோவில்தான் என்பது குறிப்பிடதக்க ஒன்றாகும்.  தகவல்கள் இன்னும் தொடரும்........

பழனி தங்கரதம் விபரங்கள் பழனி திருக்கோவில் தகவல்கள் Palani Temple Golden...

பழனி திருக்கோவில் தங்கரதம் தகவல்கள்: பழனி திருக்கோவிலில் தங்கதேர் இழுத்திட வேண்டிக்கொள்ளும் பக்தர்கள் அதற்க்கு கட்டணமாக ₹2000/-செலுத்தவேண்டும். தைப்பூச திருவிழா வின் போது 4 நாட்களும், பங்குனி உத்திர திருவிழாவின் போது 4நாட்களும், நவராத்திரி விழாவின் போது 10 நாட்களும், சூரசம்ஹாரம் நடைபெறும் 1 நாளும், திருகார்த்திகை தீப திருநாள் 1 நாளும் தங்கரத புறப்பாடு கிடையாது. இதை தவிர பிறநாட்களில் பழனி திருக்கோவில் அலுவலகங்களில் பணம் செலுத்தி பக்தர்கள் தங்கரதம் இழுக்கலாம். மலை கோவில் மேல் உள்ள அலுவலகத்திலும் பணம் செலுத்தலாம். தங்கரதம் இழுத்திட பணம் செலுத்தும் நபருடன் இருநபர்கள்உடன் செல்லலாம். திருக்கோவில் சார்பில் தங்கரதம் இழுக்கும் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்குவார்கள். பழனி மலைக்கோவிலில் உள்ள தங்கரதம் ஈரோட்டை சேர்ந்த திரு. VVCR. முருகேசமுதலியார். அவர்கள். என்பவரால் 17/08/1947 அன்று பழனி திருக்கோவிலுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடதக்க செய்தியாகும். மேலும் விபரங்களுக்கு திருக்கோவில் அலுவலகத்தை பக்தர்கள் அணுகலாம். தகவல்கள் இன்னும் தொடரும்........

பழனி கோவில் தரிசன நேர விவரம் | Palani Temple Darshan Timing Details

  பழனி கோவில் தரிசன நேர விவரம் | Palani Temple Darshan Timing Details அருள்மிகு பழனி தண்டயுதபாணி சுவாமி திருக்கோவில் காலை 6-00 மணி முதல் இரவு 8-00 மணிவரை திறந்திருக்கும் சிறப்பு நாட்களில் அதிகாலை 4-30 மணிக்கே திறந்துஇருக்கும் இக் கோவிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம், சூரசம்ஹாரம், வைகாசி விசாகம், சிறப்பாக கொண்டாடப்படுகிறது. காலை 5-40 மணிக்கு விஸ்வரூப தரிசனம் அருள்மிகு தண்டயுதபாணி சுவாமி காலை 6-40 க்கு சன்யாசி அலங்காரத் திலும், காலை 8-00 மணிக்கு வேடன் அலங்காரத் திலும், காலை 9-00 மணிக்கு பாலசுப்பிரமணி யர் அலங்காரத் திலும், நண்பகல் 12-00 மணிக்கு வைதீகாள் அலங்காரத்திலும், மாலை 5-30 மணிக்கு ராஜஅ லங்காரத்திலும், இரவு 8-00 மணிக்கு புஷ்ப அலங்காரத்திலும் அருள்மிகு பழனி தண்டயுதபாணி சுவாமி காட்சியளி க்கின்றார் தகவல்கள் இன்னும் தொடரும்........

Palani Temple Special Information /Palani Temple A to Z /பழனி தகவல்கள்

பழனி கோவில் முடி காணிக்ககை விவரங்கள் மற்றும் இடங்கள்

      பழனி கோவில் முடி காணிக்ககை செலுத்தும் விவரங்கள் மற்றும் இடங்கள் / Palani Temple Information அருள்மிகு பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு முடிகாணிக்கை செலுத்தவரும் பக்தர்கள் முடிக்காணிக்கை செலுத்த இத்திருக்கோவில் சார்பில் திருஆவினன்குடி திருக்கோவில் அருகிலும், தேவர்சிலை பின்புறமும், தண்டபாணி நிலையத்திலும், தண்டபாணிநிலையம் வெளிப்புறமும், தேவஸ்தான அலுவலகம் அருகிலும், வின்ச் அருகிலும், பாதவிநாயகர் கோவில் அருகிலும், சண்முகநதி யிலும், முடிஇற க்கும் இடங்கள் உள்ளன, இவ்விடங்களில் முடியிறக்கும் தொழிலாளர்கள் 330 நபர்கள் பணிபுரிகின்றர்கள், முடிக்காணிக்கை மூலம் வரும் வருமானம் அருள் மிகு பழனியாண்டவர்க்கு செல்கின்றது, பக்தர்களின் முடியும், முடிகாணிக்கையும், அருள்மிகு பழனியாண்டவர்க்கு செல்ல வேண்டும் என்றால், பழனி திருக்கோவில் மூலம் ஏற்பாடு செய்துள்ள இடங்களில்மட்டுமே முடிக்காணிக்கை செலுத்த வேண்டும்.